ஈரான் மீது சைபர் அட்டாக் எனப்படும் இணையதள தாக்குதலை நடத்தியது இஸ்ரேலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரானின் அரசு இணையதளங்கள், அணு உலை தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அணு மின்சார உற்பத்தி நிலையங்களுக்கான தளங்களை குறிவைத்து, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் முக்கிய சேவைகள் முடங்கியதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.