சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆழமாக வேர் பதித்து ஆர்.எஸ்.எஸ் செய்து வரும் பணிகள் அளப்பரியது என மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகின் ஆகச்சிறந்த தத்துவமான இந்துத்துவத்தை பிரபஞ்சத்திற்கு அளித்த #RSS எனும் மாபெரும் இயக்கம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஒரு அரசியல் கோட்பாடு 100 ஆண்டுகளாக மனித குலத்தை செம்மையாக வழிநடத்துவது உலகில் வேறு எங்கும் காண முடியாத ஒன்று.
இதற்கு காரணமான ஒவ்வொரு ஸ்வயம் சேவகர்களுக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆழமாக வேர் பதித்து சங்கம் செய்து வரும் பணிகள் அளப்பரியது.
பேரிடர் காலங்களில் மக்களின் கண்ணீர் துடைத்து ஆர்.எஸ்.எஸ் ஆற்றி வரும் அரும் பணிகள் ஏராளம். சமுகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து ஆர்.எஸ்.எஸ் அரும்பணியாற்றி வருகிறது.
பாரத தேசத்தின் பாரம்பரிய பெருமையை மீட்டெடுக்கவும், துண்டாடப்பட்ட தேசத்தை மீண்டும் இணைத்து பாரதத்தை பெரும் தேசமாக்குவதற்கு உறுதி ஏற்போம். உலகின் குருவாய் பாரதமாகிட உன்னத சக்தி வளர்ப்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.