ஓடிடி தளங்களுக்கு கடிவாளம் போட வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி நாக்பூரில் நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, , ஓடிடி தளங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி செயல்படுவதாகவும், அதில் காண்பிக்கப்படும் காட்சிகள் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆபாச காட்சிகளை உள்ளடக்கிய ஓடிடி தளங்களுக்கு எதிராக உடனடி சட்டம் தேவை எனவும் அவர் கூறினார்.
இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், இது சமூகத்தை பலவீனப்படுத்தும் காரணியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.