நாட்டு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மேற்கு வங்கம் டார்ஜிலிங் நகரில் உள்ள சுக்னா கன்டோன்மென்டில், ராணுவ வீரர்களுடன் இணைந்து ராஜ்நாத் சிங், விஜய தசமியை கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அண்டை நாடுகளிடம் இருந்து எந்தவித தாக்குதலும் நடக்காது என்று புறந்தள்ளி விடமுடியாது என்றும், எந்த சூழலையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.
நாம் முழு அளவில் தயாராக இருக்கிறோம் என்று ஆயுத படை வீர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.