சென்னையில் நமோ கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு!
Aug 6, 2025, 01:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் நமோ கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு!

Web Desk by Web Desk
Oct 13, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை தி.நகரில் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசி மதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோருக்கு நினைவு பரிசும், தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. அதேபோல் ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கபட்டன.

முன்னதாக  பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், Kelo இந்தியா திட்டம் மூலமாக பல விளையாட்டுகளில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி என தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள திறமையான மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம் என்று கூறினார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையான பாஜக ஆட்சி இந்தியாவை வல்லரசாக்கும் செயலின் முன்னெடுப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மகாராஷ்டிரா மாநில ஆளுநர், சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டிற்காக பிரதமர் மோடி ஒயாமல் உழைக்கிறார் என தெரிவித்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற வாக்கியத்தை ஐ நா சபையில் பிரதமர் மோடி சொல்லி தமிழிற்கு பெருமை சேர்த்தார் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக  பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் நமது நாட்டின் விசேஷ தன்மையான யோகா தினம் கொண்டாடப்பட்டது என தெரிவித்தார். மேலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தவர் பிரதமர் மோடி என பெருமிதம் கூறினார்.

தொடர்ந்து பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோடிக்கணக்கான ஏழை மக்களை ஏழ்மையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளதாக கூறினார். மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

பின்னர் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஐநா சபைக்கு சென்றாலும், அயோத்திக்கு சென்றாலும் தமிழை நேசித்து வணங்க கூடியவர் பிரதமர் மோடி என பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாகபேசிய தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களையும் தனது குடும்பமாக நினைத்து வாழ்ந்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி எழுதிய Exam Warrior என்ற புத்தகத்தை மாணவர்கள் படித்தால், தேர்வுகள் மீதான பயம் போகும் என்றும், மன் கி பாத் மூலம் மாணவர்களிடையே பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி என்றும் கூறினார்.

Tags: amo Educational and Charitable Foundationaharashtra Governor CP RadhakrishnanL MuruganPrime Minister Modi birthday celebration
ShareTweetSendShare
Previous Post

பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு – திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!

Next Post

கவரப்பேட்டை ரயில் பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies