இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடித்தளம் வித்திட்டவர் பிரதமர் மோடி என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், அன்லீஷ்ட் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ஓரிரு நாளில் வெளியாக உள்ள அந்த புத்தகத்தில், தனது அரசியல் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி உடனான சந்திப்புகளை அந்த புத்தகத்தில் மோரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.