கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே 15 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
சில மாதங்களுக்கு முன் திருமணமான கார்த்திக் – விஷ்மயா தம்பதி, கொட்டாரக்கராவிலிருந்து ஆலுவா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பக்கவாட்டு சுவற்றை உடைத்துக் கொண்டு கிணற்றுக்குள் கவிழ்ந்தது.
அப்போது நல்வாய்ப்பாக கிணற்றுக்குள் 5 அடி ஆழத்துக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் தம்பதி உயிர் தப்பினர். சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு சென்ற அக்கம் பக்கத்தினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் கார் கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.