ஆந்திராவின் கர்னூல் அருகே பன்னி திருவிழாவில் சண்டையிடும் சடங்கில், 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தசரா பண்டிகையையொட்டி தேவரக்கட்டு பகுதியில் உள்ள மலைமல்லேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பன்னி திருவிழாவின்போது, 5 கிராம மக்கள் ஒரு குழுவாகவும், மற்ற 3 கிராம மக்கள் மற்றொரு குழுவாகவும் சேர்ந்து சண்டையிடுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டும் போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, சண்டையிடும் சடங்கில் வன்முறை வெடித்தது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே நடந்த அதிகார மோதலில், காயமடைந்த 70 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.