கதிசக்தி தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிசக்தி விளக்க மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்தியாவின் உள்கட்டமைப்பை புரட்சிகரமாக்கும் நோக்கத்துடன், மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமரின் கதிசக்தி தேசியப் பெருந்திட்டம் 2021-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி உருவாக்கப்பட்டது. கதிசக்தி திட்டம் தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, டெல்லி பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கதி சக்தி விளக்க மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பாரத் மண்டபத்தில் கதிசக்தி திட்டத்தின் முக்கிய அம்சங்கள், சாதனைகள் உள்ளிட்டவை பார்வையிட்ட பிரதமர் மோடி, நாடு முழுவதும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், கதிசக்தி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் அதிகாரிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.