ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்து வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வந்தது. அண்மையில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சி 42 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க ஒமர் அப்துல்லா,துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து அனுமதி கோரினார். விரைவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்து வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டுள்ளது.