விருதுநகர், சிவகாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
Oct 29, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விருதுநகர், சிவகாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 14, 2024, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார்.

விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு இணைந்து சென்று உறுப்பினர் சேர்க்கை பணிகள் மேற்கொண்டோம். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆயிரம்கண் மாரியம்மன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்த பிறகு, சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்களைச் சந்தித்தேன்.

விசைத்தறி தொழில் புரிவதை தங்களது தொழிலாக கொண்டிருக்கும் இம்மக்களிடம், விசைத்தறி துறையினரின் தொழில் நன்மைக்கென்று மத்திய அரசு செய்து வருகின்ற பணிகள் பற்றி விளக்கமளித்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், நமது கட்சியின் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நமது கட்சி நிர்வாகிகளோடு இணைந்து சென்று, பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சிவகாசியில் உள்ள சிங்கம்பட்டி பகுதியில் இயங்கி வருகின்ற பட்டாசு ஆலை ஒன்றில் பணியாற்றி வருகின்ற தொழிலாளர்களிடம், மகளிர் நலனுக்காக நமது மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி பேசுகின்ற வாய்ப்பு அமைந்தது. பெண்களின் துயரம் போக்கும் வகையில், ‘உஜ்வாலா’ திட்டமியற்றி மானிய விலையிலான கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது;

மகளிர் சொந்தக்காலில் நின்று சுயதொழில் செய்யும் வகையில் மகளிர் கடன் திட்டங்கள்; அரசின் ஒவ்வொரு நிதியுதவியும், பெண்களின் கைகளுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் ‘ஜன்தன் வங்கிக் கணக்கு’ உருவாக்கித் தந்தது என்று, பிரதமர் மோடியின் தலைமையில் நாம் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த விளக்கங்கள் அளித்தேன். அங்கு பணிபுரிகின்ற பெண் தொழிலாளர்கள் தங்களை நமது கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டதுடன், நமது ஆட்சி மீதான அவர்களது அன்பையும் வெளிப்படுத்தினார்கள்.

இதனியடையே அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் மொத்தம் 7 மெகா டெக்ஸ்டைல் பார்க் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அருப்புக்கோட்டையில் ஒரு டெக்ஸ்டைல் பார்க் அமையவுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்கு தேவையில்லாத 1500 சட்டங்கள் நீக்கப்பட்டதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

இதேபோல்  மதுரை நகர் மாவட்டத்தில் நாம் மேற்கொண்டு வரும் உறுப்பினர் சேர்க்கை பணிகளின் இடையே, மதுரை சௌராஷ்டிரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் குழுவினருடன் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்குபெற்றேன்.

நமது பாரதிய ஜனதா கட்சியின் மதுரை நகர் மாவட்டத் தலைவர், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பிரதமர் மோடி
தமிழர்களுக்கும், சௌராஷ்டிராவினருக்கும் இடையிலான நெடுங்கால நெருங்கிய உறவை குறிப்பிடும் வகையில், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியை நடத்தியது பற்றி விளக்கமளித்தேன்.

தேசத்தின் வளர்ச்சியில் நாம் ஆற்றி வருகின்ற பங்களிப்புகளை விளக்கிக் கூறிய பின், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழில் முனைவோர்கள் நமது கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள் என  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: BJP members campMaduraisivakasiVirudhunagarcentral minister l murugan
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டது – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Next Post

அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? பாமக நிறுவனர் ராமதாஸ்

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies