மதுரை மாவட்டம் காதக்கிணறு அருகே ஓடை உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பாப்பன்குளம் கிராமப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய உபரி நீர் ஓடையில் உடைப்பு ஏற்பட்டதால் செம்மியேனந்தல், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும், குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமானதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊருக்குள் வெள்ளம் புகுவதை தடுப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.