கோவை சாய்பாபா கோயில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் அரசு பேருந்து சிக்கில் கொண்டதால் அதிலிருந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, சாய்பாபா கோயில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிக் கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர், பேருந்தில் தவித்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். நேற்று முன்தினம் இதே இடத்தில் தனியார் பேருந்து மழைநீரில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.