அந்தியூரில் பெய்த கனமழை காரணமாக கடைகளில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அந்தியூர், அண்ணாமடுவு, தவிட்டுப்பாளையம், புது மாரியம்மன் கோயில், சந்தியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாலையில் தேங்கி நின்ற மழைநீரால் வாகனங்கள் பழுதடைந்த நிலையில், தவிட்டுப்பாளையம் பகுதியில் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.
கனமழை பெய்யும்போது கழிவுநீருடன் மழைநீர் கலப்பதால் விஷ ஜந்துகள் கடைக்குள் வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், முறையாக வடிகால் அமைத்து மழைநீர் கடைக்குள் புகாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.