சென்னை புறநகரில் வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை புறநகரில் வெளுத்து வாங்கிய மழை – சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Oct 15, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பு, சுரங்கபாதைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை பெரம்பூர் பகுதியில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் நெடுந்தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுராந்தகம், மறைமலைநகர், செய்யூர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் பாதியளவு மூழ்கிய நிலையில் கார்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

Tags: rain warningheavy rainrain alertweather updatetamilnadu rain. metrological center
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் தொடர் மழை – விரைவு ரயில்கள் ரத்து!

Next Post

சென்னையில் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies