சென்னை புறநகரில் வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!
Nov 21, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை புறநகரில் வெளுத்து வாங்கிய மழை – சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Oct 15, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பு, சுரங்கபாதைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை பெரம்பூர் பகுதியில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் நெடுந்தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுராந்தகம், மறைமலைநகர், செய்யூர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் பாதியளவு மூழ்கிய நிலையில் கார்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

Tags: heavy rainrain alertweather updatetamilnadu rain. metrological centerrain warning
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் தொடர் மழை – விரைவு ரயில்கள் ரத்து!

Next Post

சென்னையில் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; இடைக்கால உத்தரவு

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திடீரென கைவிடுவது ஏன் ?; உயர்நீதிமன்றம் கேள்வி

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி; கண்ணையா மீது புகார்

முன்னாள் அமைச்சர் மூர்த்தி இல்லத்தில் சோதனை; ஸ்டாலின் கண்டனம்

கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானார்; மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு

டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்

அன்பில் மகேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு மனுத்தாக்கல்

நிரப்பப்படாமல் இருக்கும் நீர்வளத்துறைம் காவிரி தொழில்நுட்பக் குழு பதவிக; தமிழக அரசுக்கு வலுக்கும் கண்டனம்

தமிழகத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது; காவல்துறை தகவல்

ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை

மண்டல பூஜையின் இரண்டாவது நாள்; அதிகரித்து காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்

சிம் பாக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி சீட்டிங்; சிறப்பு செய்தி தொகுப்பு

வீட்டிற்கே வந்து மிரட்டுகிறார்கள்; முன்னாள் காவல் ஆய்வாளர் வீடியோ வெளியீடு

செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கு;3வது நாளாக சிபிசிஐடி விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies