சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற முதலமைச்சர், காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கனமழை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.