இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நகேந்திரனக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அன்பிற்குரிய நயினார் நகேந்திரன் அவர்களுக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து சமுதாயப் பணியாற்றி வரும் தங்களது சேவைகள் தொடர்ந்திடவும், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வின் அனைத்து வளங்களும் பெற்று இன்புற வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக பாஜக சட்டமன்றக் குழு தலைவரும், மாநிலத் துணைத் தலைவருமான அன்பு நயினார் நகேந்திரன்
அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது அயராத உழைப்பாலும், மக்கள் நலன் சார்ந்த பணிகளாலும், அனைவரின் அன்பையும் பெற்றுள்ள அண்ணன் நயினார் நாகேந்திரன் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், நலமுடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.