அனைத்து பேருந்துகளும் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் நேற்று போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. திரும்பும் திசையெல்லாம் மழைநீர் சூழ்ந்து காட்சியளித்தது. இதன் காரணமாக பேருந்துகள் வழக்கம் போல் செல்லும் சில வழித்தடங்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டது.
இந்த நிலையில், இரவு முதல் மழை குறைந்துள்ளது. மேலும், தேங்கிய தண்ணீரும் வடிந்து கொண்டிருப்பதால் இன்று அனைத்து பேருந்துகளும் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.