கனமழை வெள்ளம் மற்றும் புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதனால், மாவட்டத்திலுள்ள பூம்புகார், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல் மற்றும் பழையார் உள்ளிட்ட 28 கிராம மீனவர்கள் 300 -க்கு மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரக்கோணத்திலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி வந்துள்ளனர். பேரிடர் கால மீட்பு உபகரணங்களுடன் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர். சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 25 பேர் வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் நீர்மூழ்கி பம்புகள் உள்ளிட்ட 60 வகையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.