கனமழை எதிரொலியாக சென்னை, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததால் ரயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதை அடுத்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது. கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களிலும் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
இதனால் புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.