சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்டும், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர், புதுச்சேரி-நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் எனவும், அப்போது சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.சென்னைக்கு 280 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளதாகவும், வட தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகி உள்ளதுதாகவும் அவர் கூறினார்
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரெட் அலர்ட் உள்ளதால் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 20 செ.மீ. மழை பெய்யும் என அர்த்தம் கிடையாது என்றும், வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப கனமழை எச்சரிக்கை மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.