தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் 21 புள்ளி 2 அடி உயரம் கொண்ட புழல் நீர்தேக்கம் தற்போது 16 புள்ளி 9 அடியை எட்டியுள்ளது.
மேலும், புழல் நீர்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 936 கன அடியாக உள்ளது. அதேபோல் சோழவரம் நீர்தேக்கத்தில் நீர்வரத்து, 498 கன அடியாகவும், பூண்டி நீர்தேக்கத்தில் நீர்வரத்து 750 கன அடியாகவும் உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்தில் நீர் இருப்பு தற்போது 13 புள்ளி ஏழு ஒன்பது கன அடியாக உள்ளது. அதேபோல் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 141 கன அடியாக உள்ளது.