செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மாமல்லபுரம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம், கடற்கரை என அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் ஒரு சிலர் மட்டும் புராதன சின்னங்களை கண்டு களித்தனர்.