வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம பேசிய அவர் கூறியதாவது :
சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. வெள்ளதடுப்பு பணிகள் முடிக்காததால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ 40 ஆயிரம் வழங்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளன. விழுப்புரத்தில் 109, கள்ளகுறிச்சியில் 86 கடைகள் உள்ளன. தற்போது கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக்கடைகளை திறக்கப்பட உள்ளது கண்டிக்கதக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறும் அரசு புதிய கடைகளை திறப்பதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது என ராமதாஸ் தெரிவித்தார்.