தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் மதுரை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம்,
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.