சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மூன்றாவது நாளாக மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டு திரும்பி சென்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியதால் கடந்த 2 நாட்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழை ஓய்ந்ததால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுமென அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மூன்றாவது நாளாக மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற முனைப்பு காட்டாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.