பிரிட்டிஷ் பேரரசு உலகளாவிய அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக எலான் மஸ்க் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் எலான் மஸ்கிற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரிட்டிஷ் பேரரசு லட்சக் கணக்கானோரை கொன்றிருப்பதாகவும், ஆனால் அதனை எலான் மஸ்க் பெருமையாக பேசி இருப்பது உயிரிழந்தவர்களை கேலி செய்வதுபோல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.