4 ஆண்டு கால திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என வி.கே.சசிகலா குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வி.கே.சசிகலா நிவாரண உதவி வழங்கினார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.
மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலம் முடிந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அதை செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். குடும்பத்தில் சொத்தை பிரிப்பதைப் போல் நிர்வாகத்தை அரசு பிரித்துக் கொடுத்ததால்தான் பிரச்னை எனவும் சசிகலா விமர்சித்தார்.