கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலேயே இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் இந்தியா – கனடா உறவில் விரிசல் பெரிதாகி வரும் நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , கனடாவில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் செய்த குற்றங்களுக்கு கனடிய காவல் துறை இந்தியத் தரப்பைக் குற்றம் சாட்டுகிறது என தெரிவித்தார். இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது தீவிரமான பிரச்சனை எனவும் , இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால்வ இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை கனடா அரசு உறுதி செய்யாது என்பதை உணர்ந்ததால்
5 பேரை மத்திய அரசு திரும்பப் பெற்றதாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.