ராமநாதபுரத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை சாலையில் உள்ள விநாயகர் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் உண்டியலை உடைத்தனர்.
பின்னர் அதிலிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.