மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் ஒற்றை மந்திரமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
May 19, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் ஒற்றை மந்திரமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

Web Desk by Web Desk
Oct 19, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : “தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுண்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500-க்கும் கூடுதலான கடைகளில், அதாவது கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது என்பதே தமிழகத்தின் சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தான்.

இவற்றில் பல கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுண்டர்கள் இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுண்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளன. வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

அவர்களின் நிலைமை குறித்து எந்த கவலையும் கொள்ளாத தமிழக அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து கூடுதல் கவுண்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tasmac shopstamilnadu governmetntpmkanbumani ramadoss
ShareTweetSendShare
Previous Post

தீட்சிதர்கள் பணி நீக்கம் தொடர்பான வழக்கு – அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

திருச்சி : தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல்!

“போலீசுக்கு போகட்டுமா?” – அதிகாரிகளை விளாசிய மூதாட்டியின் வீடியோவால் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

20 கோடி பார்வைகளை கடந்த “தாராள பிரபு” பட பாடல்!

கேரளா : ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்கும் வெங்கட் பிரபு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies