நீர்வரத்து சீரானதால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7 நாட்களுக்கு பின் வனத்துறை அனுமதி அளித்தது.
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை கடந்த 12-ஆம் தேதி தடை விதித்தது. இந்நிலையில், தற்போது மழைபொழிவு குறைந்து நீர்வரத்து சீரானதால் 7 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அங்கு குவிந்த சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.