தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணையில் பருவமழை முன்னெச்சரிக்கையாக, நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், வைகை அணையில் மணல் மூட்டைகளும், சவுக்கு மரங்களும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வைகை அணையில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.