பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர்களை, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் கட்டித் தழுவி வாழ்த்தும் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்தியாவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஜாகிர் நாயக் மலேசியாவில் தலைமறைவானார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ‘அமைதி’ பயணமாக சென்றுள்ள அவர், ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பா தளபதி முஸம்மில் இக்பால் ஹஷ்மி மற்றும் ஹாரிஸ் தர் ஆகியோரை சந்தித்துள்ளார்.