பெண் குழந்தைகளின் கல்விக்காக போராட வேண்டியதன் அவசியத்தை Aayushmati Geeta Matric Pass திரைப்படம் எடுத்துரைப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், சில நாட்களுக்கு முன்பு நடிகை காஷிகா கபூரை எனது அலுவலகத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது ஆயுஷ்மதி கீதா மெட்ரிக் பாஸ் (Aayushmati Geeta Matric Pass), என்ற திரைப்படம், தற்போது வெளியாகி உள்ளது,
இது பெண் குழந்தைகளின் கல்விக்காக போராட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது. #BetiBachaoBetiPadhao முன்முயற்சியின் ஆதரவாளராக, இவரைப் போன்ற இளம் பெண்கள் தங்கள் கனவுகளை அடைவதைப் பார்ப்பது அற்புதமானது. காஷிகா, நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.