தடை செய்யப்படுமா Kellogg's ? அபாயகரமான நச்சு கலப்பு புகாரால் கொந்தளிப்பு - சிறப்பு கட்டுரை!
Aug 22, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடை செய்யப்படுமா Kellogg’s ? அபாயகரமான நச்சு கலப்பு புகாரால் கொந்தளிப்பு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் முன்னணி உணவு நிறுவனமான கெல்லாக்கின் பிரபலமான காலை உணவுகளான ஃப்ரூட் லூப்ஸ் மற்றும் ஆப்பிள் ஜாக்ஸ் போன்றவற்றில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயன மற்றும் செயற்கை சாயங்களைத் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கெல்லாக் தயாரிப்புக்களில் என்ன மாதிரியான ரசாயனங்கள் மற்றும் செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகின்றன ? அவை ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Corn flakes எனப்படும் சோள அவல் என்பது காலை உணவாகும்.பொதுவாக இது மக்காச்சோளத்தால் தயாரிக்கப்படுகிறது.1894ம் ஆண்டு, மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக்கால் நோயாளிகளுக்கான ஆரோக்கியமான உணவாக உருவாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இதனை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்க, கெலாக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு, கெலாக்ஸ் செயல்முறைக்கான காப்புரிமையும் வாங்கப்பட்டது. தொடர்ச்சியான பல பரிசோதனைகளுக்குப் பிறகு அரிசி உட்பட பல்வேறு பொருட்களைச் சேர்த்து, வெவ்வேறு தானியங்களை கெல்லாக்ஸ் பயன்படுத்த தொடங்கியது. 122 ஆண்டுகளில் பல உணவுப் பொருட்கள் தயாரிப்புடன் கெல்லாக்ஸ் உலகின் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது.

கெலாக்ஸ்ஸின் ஃப்ரூட் லூப்ஸ் மற்றும் ஆப்பிள் ஜாக்ஸ் ஆகியவை பிரபலமான காலை உணவுகளாக அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்த இரண்டு பிராண்டும் குழந்தைகளை அதிகம் கவர்ந்திருக்கின்றன. இப்போது, இதில் தான் சிக்கல் எழுந்திருக்கிறது.

கடந்த செவ்வாய்கிழமை கெலாக் நிறுவனத்தின் மிச்சிகன் தலைமையகத்துக்கு வெளியே பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்கள் ஒன்று திரண்டனர். மேலும், கெலாக்கை தடை செய்யும் 400,000 மனுக்களை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவை தவிர பல்வேறு நாடுகளில் விற்கப்படும் கெலாக்ஸ் தயாரிப்புகளில் செயற்கை உணவு சாயங்களைப் பயன்படுத்துவதில்லை . குறிப்பாக, கனடாவில், கெலாக்ஸ் ஃப்ரூட் லூப்களில் செயற்கை சாயங்களுக்குப் பதிலாக தர்பூசணி, புளூபெர்ரி மற்றும் கேரட் சாறு ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன.

ஏற்கெனவே, 2018 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஃப்ரூட் லூப்ஸ் மற்றும் ஆப்பிள் ஜாக்ஸ் போன்ற பிரபலமான தயாரிப்புக்களில் செயற்கை சாயங்கள் மற்றும் தீமை விளைவிக்கும் சேர்க்கைகளை அகற்றுவதாக உறுதியளித்த கெல்லாக், அந்த உறுதிமொழியை நிறைவேற்ற வில்லை.

மற்ற நாடுகளில் இல்லாமல் அமெரிக்காவில் மட்டுமே குழந்தைகளைக் குறிவைத்து கெலாக்ஸ் தனது அனைத்து தானியங்களிலும் இந்த செயற்கை உணவு சாயங்களைச் சேர்கின்றன என்றும், இது அமெரிக்கர்களுக்கு எதிரான, நெறிமுறையற்ற, ஒழுக்கக்கேடான செயல் என்றும் பெரும்பாலான அமெரிக்கர்கள் கெலாக்ஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

குழந்தைகளின் நடத்தை சிக்கல்களுக்குப் பெரும்பாலும், குழந்தைகள் எடுத்துக் கொள்கிற உணவுகளில் உள்ள செயற்கை சாயங்களே காரணம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.மேலும், செயற்கை உணவு சாயங்கள், குழந்தைகளின் ஹைப்பர் ஆக்டிவிட்டி மற்றும் பிற நரம்பியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது என்று பெர்க்லி மற்றும் டேவிஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய செயற்கை சாயங்களில் பல, பெட்ரோலிய பொருட்களில் இருந்து உருவாக்கப் படுவதாகவும் அமெரிக்க உணவு வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், செயற்கை உணவு சாயங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் மசோதாவில் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சுழலில், 7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருக்கும் நடிகை ஈவா மென்டிஸ், கெலாக்ஸால் தான் வளர்ந்ததாகவும், இன்னும் கெலாக்ஸை விரும்புவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் விற்கப்படும் கெலாக்ஸில் பயன்படுத்தும் பல பொருட்கள் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன என்றும், குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் கெலாக்ஸை இனி உண்ணமாட்டேன் என்றும் இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டிருக்கிறார். நடிகை ஈவாவுக்கு இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் FOLLOWERS இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

85 சதவீதத்துக்கும் அதிகமான கெலாக்ஸ் தயாரிப்புக்களில் செயற்கை சாயங்களைச் சேர்ப்பதில்லை என்று கூறியுள்ள கெலாக்ஸ் நிறுவனம், அரசின் விதிமுறைகளை மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

தங்கள் உணவு பாதுகாப்பு உரிமையை எப்போதும் விட்டு கொடுக்காத, அமெரிக்கர்கள் கெலாக்ஸ்ஸுக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். அமெரிக்காவில் கெலாக்ஸின் சரிவு ஆரம்பமாகி உள்ளது .

Tags: americaKellogg's popular breakfastdemo in usFruit Loopspple Jacksrtificial colors
ShareTweetSendShare
Previous Post

டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி அருகே குண்டு வெடிப்பு – காலிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்பு!

Next Post

அரசு இல்லத்தில் ஆடம்பர வாழ்க்கை – ரூ. 50 கோடி செலவழித்த அரவிந்த் கெஜ்ரிவால் – சிறப்பு கட்டுரை!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies