டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி அருகே நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு காலிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றது.
டெல்லி ரோஹினி செக்டார் பகுதியில் அமைந்துள்ள சிஆர்பிஎஃப் பள்ளி அருகே மர்ம பொருள் பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
அதன் சப்தம் ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்டதாகவும், மர்ம பொருள் வெடித்ததில் அப்பகுதியில் உள்ள கட்டடங்களும் வாகனங்களும் குலுங்கியதாகவும் தகவல் வெளியானது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.