நாட்டின் வளர்ச்சி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பங்கு முக்கியமானது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தது முதல் தற்போது உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சராக இருப்பது வரை, பல தசாப்தங்களாக இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அவரது பங்கு முக்கியமானது என தெரிவித்துள்ளர்.
அவரது தலைமையின் கீழ் ஒரு வலுவான போலீஸ் அமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவருக்கு நல்ல ஆரோக்கியம், மற்றும் வெற்றிகள் தொடர வாழ்த்துவதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.