இனி வரும் காலங்களில் சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் என கடற்படை தளபதி தினேஷ் தசதரன் தெரிவித்துள்ளார்.
1971 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி இந்தியா பாகிஸ்தான் பேரில் இந்தியா கப்பல்கள் கராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்தன.இதன் விளைவாக பங்களாதேஷ் இந்தியாவின் கட்டுபாட்டில் வந்தது.
இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வெரு வருடமும் டிசம்பர் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கடற்படை தினம் கொண்டாட உள்ள நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கடற்படையின்( தமிழ்நாடு புதுச்சேரி பிரிவு )சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புலியிறங்கி பகுதியில் உள்ள தனியார் மேனிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்,கடற்படை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.
இதுதொடர்பாக பேசிய இந்திய கடற்படையின் தளபதி தினேஷ் தசதரன், சோழ மண்டலத்தில் உள்ள மாணவர்கள் அதிகம் அளவில் கடற்படையில் சேர்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
















