நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று பலமாக வீசியதில் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
அறுவடைக்கு தயாராக 2 மாதங்களே உள்ள நிலையில் வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் இழப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சுகன்யா, கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பயிர் சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.