தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி திருச்சியில் தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றும் பணியில் வேதா என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின்கீழ் தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, வேதா நிறுவன ஊழியர்கள் மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்படவே தூய்மை பணியாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















