மீண்டும் மலரும் உறவு : பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு - சிறப்பு கட்டுரை!
May 26, 2025, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் மலரும் உறவு : பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 26, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் மோடியும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்குப் பிரதமர் மோடி முன் வைத்த யோசனைகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் நதிப் பள்ளத்தாக்கில் ஒரு முக்கியமான விமானத் தளத்துடன் இணைக்கும் சாலை அமைக்கும் இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் சீனா கடும் எதிர்ப்பு காட்டியது.

அதன் தொடர்ச்சியாக, 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் எல்லைப் பகுதியில், இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பல சீன வீரர்களும் இறந்தனர்.

அதன் பிறகு, 2021ம் ஆண்டு ஜனவரியில், சிக்கிம் எல்லையில், நகு லா கணவாய் அருகே இருநாட்டு துருப்புக்களும் மோதிக்கொண்டன. அதே ஆண்டு செப்டம்பரில், பாங்காங் ஏரிக்கு அருகே இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு, டிசம்பரில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லை பகுதியில், சீனா மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதனை தொடர்ந்து, சீனாவுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்தார். டிக் டாக் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீன ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப் பட்டது. சீனர்களுக்கான விசா நடைமுறைகளில் புதிய கடுமையான விதிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

சீன முதலீடுகள் விஷயத்திலும் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பபட்டன. பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை, இந்தியாவில் மின்சார வாகனங்களை உருவாக்க திட்டமிட்டிருந்த BYD நிறுவனத்தின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு திட்டம் உட்பட பல முதலீட்டு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

அதே நேரத்தில், தெற்காசியாவின் மிக பெரிய உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கு, சீன வணிகங்களை ஈர்ப்பது அவசியம் என்று இந்திய பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தனர். ஆனாலும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத முதலீட்டு திட்டங்களில் அனுமதிக்க தேசிய பாதுகாப்புத் துறை முடிவெடுத்தது.

இந்நிலையில், உள்நாட்டு தொழில் துறையில் நெருக்கடி, சீன தொழில் நுட்பத்தின் மீதான அமெரிக்காவின் வர்த்தக தடை, புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள போட்டி ஆகியவற்றால் சீனாவும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சீனா உற்பத்தி பொருட்களுக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், சீனாவின் நிலைமை இன்னும் மோசமாகலாம்.

சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சனை தொடர்பான இராணுவ மோதல்கள் இருந்த போதிலும், கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுகளின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

2022ஆம் ஆண்டு,135.98 பில்லியன்அமெரிக்க டாலராக இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், 2023 ஆம் ஆண்டில், 136 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள் மற்றும் இரசாயனங்கள் மற்றும் மருந்துகளின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவிலிருந்துதான் வந்துள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப் படி, சீனாவிலிருந்து இறக்குமதிகள் அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் வகிக்கிறது.

கடந்த வாரம், இந்தியாவும் சீனாவும் Line of Actual Control எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. இதை தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

அதன்பிறகு, இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஸ்திரப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசாக்களை விரைவாகக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை இந்தியா தொடங்கும் என்றும், இருநாடுகளுக்கு இடையே நேரடி விமானச் சேவையும் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சீன உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், சீன முதலீட்டுத் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

கூடுதலாக, மின்னணு மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களில் 10 சதவீத சீன முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தையும் இந்தியா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இது புறம் இருக்க, டிக்டாக் போன்ற சீன செயலிகளுக்கான தடை நீடிக்கும் என்றும், சீன பொருட்கள் வரிவிதிப்பில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு அணு சக்தி நாடுகளுக்கு இடையேயான உறவுகள் இனி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags: Indiachinaprime minister modiChinese President Xi Jinpingbilateral relations
ShareTweetSendShare
Previous Post

பொருளாதார வளர்ச்சியின் புதிய சக்தியாக மாறி வரும் இளைய தலைமுறை : போட்டி போடும் பெரு நிறுவனங்கள் – சிறப்பு கட்டுரை!

Next Post

நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Related News

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்!

கன்னியாகுமரியில் கனமழை – அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரர் – குவியும் பாராட்டு!

பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் – அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – கோஸ் இசை வாசித்தபடி சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

நல்ல கதை கொடுத்தால் படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர் – கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல காதணி விழா – இபிஎஸ், எல், முருகன், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் தீவிர சோதனை!

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – சென்னை வந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அபார வெற்றி!

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

என்டிஏ மாநில முதல்வர்கள் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies