சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கிய நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை – வேளச்சேரி ரயில் வழித்தடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் வேளச்சேரி வரை செல்லும் ரயில்கள் வழக்கம்போல கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் இயக்கப்படுகின்றன.
இருப்பினும் மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.