சென்னை தண்டையார்பேட்டையில் தந்தையை எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் எரிந்த நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அவரது மகன் தனுஷ்கோடி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் அளித்த அறிக்கையின் படி மகன் தனுஷ்கோடியிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
அதில் அவரே தந்தையை தீவைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து தனுஷ்கோடியை கைது செய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.