திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பஞ்சாயத்து நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பொதுமக்களே சுத்தப்படுத்தினர்.
கூக்கால் கிராமத்தில் வசிக்கும் பலரும், கடந்த சில மாதங்களாகவே மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதற்கு சுகாதாரமற்ற குடிநீர் பருகுவதே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, கிராம மக்களே பொது குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தனர்.
அதில் களிமண் சகதியும், குப்பைகளும் சேர்ந்திருந்ததுடன், பாம்பு, பறவைகள் உள்பட பல்வேறு உயிரினங்களும் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர். அவற்றையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு, தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.