தேனி மாவட்டம், கூடலூரில் கஞ்சா எண்ணெய் தயாரித்து விற்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ கஞ்சா எண்ணெய்யை விற்பனைக்காக அவர்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.