திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவர்களின் வசதிக்காக கட்டப்பட்ட தங்கும் விடுதியை கடந்த 14-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இன்னும் சில தினங்களில் கந்தசஷ்டி விழா தொடங்கவுள்ளதால் விடுதியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.