கடலூரில், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
மருங்கூரை சேர்ந்த பிரேம்மதாஸ் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடி, 38 ஆயிரம் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரேம்மதாஸ்.
விஷமருந்திய நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.