500 ஆண்டுகளுக்கு பகவான் ராமர் தனது கோயிலில் தீபாவளி கொண்டாட விருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், பகவான் ராமர் அயோத்தியில் தனது பிரமாண்ட கோயிலில் அமர்ந்திருப்பதால், நிகழாண்டு தீபாவளி கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்றும், அதைப் பார்க்கும் நாம் அதிர்ஷ்டசாலிகள் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.